நியூஸிலாந்திற்கு பதிலடி கொடுத்து மாஸ் வெற்றி பெற்ற இந்தியா!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வென்றது.


 டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை இந்த போட்டியில் நிலைத்து நின்று ஆடவிடாமல் சிறப்பாக பந்து வீசி இந்திய பவுலர்கள் அவர்களை அவுட் செய்தனர்.

எனினும் அந்த அணியின் க்ராந்தோம் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். ராஸ் டெய்லர் 42 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட20  ஓவர்களில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158  ரன்களை எடுத்தது. இந்திய அணியின் க்ருனால் பாண்டியா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய தவான் 30 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 50 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ரிஷாப் பாண்ட் அவுட் ஆகாமல் 40 ரன்களையும், டோனி அவுட் ஆகாமல் 20 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது.

சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது .