பும்ராவால் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடும்! ஆனால் யாருக்கு எதிராக தெரியுமா? அஸ்வின் கூறும் ரகசியம்!

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஷ்வின், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதி போட்டியில் எந்த அணியுடன் விளையாடும் என கணித்துள்ளார்.


உலக கோப்பை கிரிக்கெட்  போட்டிகள்  கடந்த ,மே மாதம் 30 -ஆம் தேதி ஆரம்பித்து பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும்  இந்த வேளையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று  தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையும் யூகங்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற வீரருமான பிரெண்டன் மெக்கலம் நடப்பு உலக கோப்பையில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தகுதி சுற்று முடிவில் முதல் இரு இடங்களை  பிடிக்கும் என்று கணித்துள்ளார்.

தற்போது இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வினும், தன்னுடைய கருத்துக்கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் நடப்பு உலக கோப்பை இறுதி போட்டியில் மோதிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார்.  காரணம் இந்திய அணி தற்போது பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சரி சமமான நிலையில் உள்ளது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மான்களான விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா போன்றோர் இந்திய அணிக்கு பெரும் பலத்தை சேர்க்க கூடிய வீரர்கள். சமீபத்தில் நடைபெற்ற சலாம் கிரிக்கெட் 2019 நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின், "இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஆட்டத்தின் சூழ்நிலைகளைக்கு ஏற்ப தன்னுடைய பேட்டிங்கை மாற்றி ஆடக்கூடிய வல்லமை பெற்றவர்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமில்லாமல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் இறங்குவது அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும். இளம் கிரிக்கெட் வீரரான ஹர்டிக் பாண்டியா அதிரடியாக ஆடி மற்றொரு வகையில் அணிக்கு பலம் சேர்ப்பார் எனவும்  அஷ்வின் கூறினார். பௌலிங்கை பொறுத்த வரையில், தலைசிறந்த பௌலர்கள் வரிசையில் முதலில்  இருக்கும் பும்ரா இந்திய அணிக்கு மிக பெரிய வலிமையை  சேர்ப்பார்  என்றும்  இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.

இந்திய அணி உலக்கோப்பை போட்டியில் வரும் ஜூன் 5-ஆம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.