அசத்திய மாயங்க், சொதப்பிய விஹாரி…

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்த இந்திய அணி தொடக்கத்தில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


ஹனுமன் விஹாரி 8 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தனது முதல் ஆட்டத்தில் மாயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 76 ரன்களை எடுத்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் புஜாராவுடன் இணைந்து விராட் கோஹ்லி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய புஜாரா அரை சதம் எடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் 2விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்திய அணியின் புஜாரா 68 ரன்களுடனும் , விராட் கோஹ்லி 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்