இடைத்தேர்தல் EXIT POLL வெளியானது! தப்புமா எடப்பாடி அரசு?

22 தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.


தமிழகத்தில் காலியாக இருந்த 18 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியும் எஞ்சிய நான்கு தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களிலும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை இந்தியா டுடே தொலைக்காட்சி எடுத்திருந்தது. அந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக மிக எளிதாக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது. ஐந்து தொகுதிகளில் திமுக அதிமுக இடையிலான போட்டி கடுமையாக இருப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இந்த அடிப்படையில் 22 தொகுதிகளில் 14 தொகுதிகளை திமுக என்றாலும்கூட காங்கிரஸ் மற்றும் தினகரன் ஆதரவு இருந்தால் மட்டுமே எடப்பாடி அரசை கவிழ்க்க முடியும். மாறாக இழுபறி என்று கூறியுள்ள ஐந்து தொகுதிகளில் இரண்டை அதிமுக வென்றாலும் கூட பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் எடப்பாடிக்கு கிடைத்துவிடும். மேலும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும் கூட நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் அறந்தாங்கி அமைய ரத்தினசபாபதி ஆகியோரும் கூட அதிமுக எம்எல்ஏக்கள் ஆக இருப்பதால் அவர்களை உத்தரவை மீறி வாக்களிக்க முடியாது. எனவே இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி தமிழகத்தில் எடப்பாடி அரசுக்கு பெரிய அளவில் ஆபத்து எதுவுமில்லை.