இனி நதி நீர் கிடையாது! ஒரே உத்தரவில் பாகிஸ்தான் கதையை முடித்த மோடி!

இந்தியாவில் இருந்த பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளில் பிரமாண்ட அணைகளை கட்டி அந்நாட்டிற்கு செல்லும் உபரி நீரை தடுக்க மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கும் நமது பங்கு தண்ணீரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

கிழக்கு பகுதி நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை பஞ்சாப் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு திருப்பி விட திட்டமிட்டுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நதியில் ஷாபூர் – காண்டி இடையே அணை கட்டும் பணி துவங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

யூஜேஹெச் திட்டத்தின் மூலம் நாம் சேமித்து வைக்கும் தண்ணீர் காஷ்மீர் மக்களுக்கு இனி முழுமையாக பயன்படுத்தப்படும். இதன் பிறகும் எஞ்சும் தண்ணீர் ரவி நதியின் அடிவாரத்தில் உள்ள மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

காஷ்மீரில் இந்திய துணை ராணுவப்படையினரை 40க்கும் மேற்பட்டோரை தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க மோடி உத்தரவிட்டுள்ளார்.

1960ம் ஆண்டு ஒப்பந்தபடி இந்தியா ரவி நதியில் ஒரு அணை கட்டிக் கொள்ள முடியும். அந்த அணை கட்டப்படும் பட்சத்தில் தற்போது ரவி நதியில் செல்லும் நீரில் 95 விழுக்காட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ள முடியும். நதியில் நீரோட்டம் குறையும் போது பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்படும்.

இதனால் பாகிஸ்தானில் வேளாண்மை மட்டும் இன்றி குடி நீர் பஞ்சமும் ஏற்படும். தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க மோடி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அணை கட்டி முடித்து தண்ணீரை நிறுத்த ஆறு ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள்.