ஓநாய் போன்று உடல் முழுவதும் முடி முளைத்த ஸ்பெயின் குழந்தைகள்! இந்தியாவில் இருந்து சப்ளை ஆன போலி மருந்து காரணமா?

ஸ்பெயினில் 16 குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படிப்படியாக முடி வளர்ந்து ஓநாய் போல் காட்சி தருவதால் பெற்றோர் மற்றும் மற்ற சிறுவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,.


ஸ்பெயின் நாட்டில் கேஸ்டா டெல் சோல் என்ற பகுதியில் போலி மருந்தை உட்கொண்ட 16 குழந்தைகளுக்கு ஓநாய் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

ஸ்பெயின் நாட்டில் கேஸ்டா டெல் சோல் என்ற பகுதியில் வசிக்கும் குழந்தைகள் சில பேருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டுள்ளது இதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருந்துகள் வாங்கி உட்கொண்டுள்ளனர்.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் மருந்துதான் ஒம்பிரசோல். ஆனால் அந்த மருந்து போலியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுவது தற்போது தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தில் அலோபேசியா நோயாளிகளுக்கு முடி வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் மைனோஸ்டில் மருந்து கலக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது.

அந்த போலி மருந்து சாப்பிட்ட 16 குழந்தைகளுக்கு ஓநாய் தொற்று ஏற்பட்டு படிப்படியாக உடல் முழுவதும் முடி வளர போலி மருந்து கலாச்சாரம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த மருந்தை சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் மருந்து நிறுவன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து மலேகாவை தலைமையிடமாக கொண்ட பார்மா கியுமிகா சர் என்ற நிறுவனம் போலி மருந்துகளை இந்தியாவில் இருந்து வாங்கியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 16 குழந்தைகளுக்குதான் பாதிப்பு இருப்பதாக தெரிந்தாலும் 30 மருந்தகங்களில் 50 பேருக்கு வரை ஓநாய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது மருந்து விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் இனி குழந்தைகள் அந்த மருந்து கொடுக்கும் சூழ்நிலை வராது. அதனால் படிப்படியாக அவர்களுககு ஓநாய் தொற்று குறையும் என்றும் முடி வளர்வதும் குறையும் எனவும் ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் முகம் முழுவதும் ஓநாய் போல் மாறிவிட்ட அந்தக் குழந்தைகளை பள்ளிகளிலும், சமூகத்திலும் யாரும் ஒதுக்கி வாழவில்லை. எப்போதும் போல் அன்பாக அந்த குழந்தைகளுக்கு அரவணைப்பு காட்டப்படுகிறது என்பது மனிதநேயத்திற்கு கிடைக்கும் வெற்றி.

ஒருவேளை அந்த மருந்தை இந்தியாவில் விற்பனை செய்திருந்தால் நம்மூர் இளைஞர்களும், இளைஞிகளும் அதிகம் வாங்கி சாப்பிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஏன் என்றால் தலைவக்கவசம் அணியாமல் செல்வதற்கு முடி அதிகம் கொட்டுகிறது என்றுதானே சொல்கிறார்கள்.