பெங்களூரில் சிக்ஸர் மழை: விராட் கோஹ்லி அதிரடி

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 190 ரன்களை எடுத்துள்ளது.


இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடைசி போட்டியில் சரியாக விளையாடாத ரோஹித் சர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவான் சேர்க்கப்பட்டு இருந்தார்.

கடைசி போட்டியில் கடைசி ஓவரை சரியாக வீசாமல் இந்திய அணியின் தோல்விக்கு காரணமான உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். மேலும் மார்கண்டே விற்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய லோகேஷ் ராகுல் தவானுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய லோகேஷ் ராகுல் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவான் பேட்டிங்கில் சொதப்பி 14  ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் விராட் கோஹ்லி டோணியுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அதிரடியாக விளையாடிய டோனி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி அவுட் ஆகாமல் 38 பந்துகளுக்கு 72 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190 ரன்களை எடுத்தது.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.