இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முதல் பெண் டிஜிபி மரணம்! தந்தையின் மானம் காப்பதற்காக போலீஸ் வேலையில் சேர்ந்த காஞ்சன் சவுத்ரி!

இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக தேர்வு செய்யப்பட்ட பெண் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) காலமானார்.


இமச்சால பிரதேசத்தில் மதன் மோகன் சவுத்ரி என்பவருக்கு முதல் மகளாக பிறந்த காஞ்சன் சவுத்ரி பட்டடாச்சாரியா அம்ரிஸ்டரில் மேல்நிலைக் கல்வியையும் மற்றும் டெல்லியில் உள்ள பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தவர். 

டெல்லிப் பல்கலைக் கழத்தில் ஆங்கில இலக்கியம் பயின்ற காஞ்சன் சவுத்ரி 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ்சில் உள்ள வொல்லொங்கொங் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் படித்தார்.

1973 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சவுத்ரி, உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் பெண் ஐபிஎஸ் ஆவார். தேசிய அளவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரன்பேடிக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்தவர்.

2004 ஆம் ஆண்டு உத்தராகண்ட் டிஜிபியாக நியமனம் ஆனது மூலம் இந்தியாவின் முதல் பெண் டிஜிபி என்ற சாதனையை படைத்த காஞ்சன் சவுத்ரி 2007 ஆம் ஆண்டு ஓய்வுப்பெற்றார்.

காவல்துறையில் நீண்ட காலம் சிறப்பான சேவை செய்ததற்காக காஞ்சன் சவுத்ரிக்கு 1989 மற்றும் 1997ம் ஆண்டுகளில் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. 1997ம்ஆண்டு நீண்ட காலம் சிறப்பான1989 இல் நீண்ட மற்றும் சிறப்பான சேவைகளுக்கான ஜனாதிபதி பதக்கம்.

மேலும் சிறந்த பெண் சாதனையாளர் என 2004 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது வழங்கி காங்சன் சவுத்ரிக்கு கவுரவிக்கப்பட்டது. பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரித்வார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக மும்பையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை வெற்று வந்த காஞ்சன் சவுத்ரி ஆகஸ்ட் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமனார். இவருக்கு கணவர் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். உத்தரகண்ட் போலீஸ் டைரக்டர் ஜெனரல் அசோக் குமார் பட்டாச்சார்யாவுக்கு அஞ்சலி செலுத்தினார்,

காங்சன் சவுத்ரி ஒரு எளிய மற்றும் இனிமையான இயல்புடையவர், அவர் டிஜிபியாக இருந்தபோது எங்களுக்கு பல ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருந்ததாக புகழாரம் சூட்டினார்.

காஞ்சன் சவுத்ரி சிறுமியாக இருந்தபோது சொத்து தகராறில் அவரது தந்தை தாக்கப்பட்டதாகவம் அப்போது அந்த குடும்பத்திற்கு காவல்துறை உதவ முன் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

தந்தை கண்முன் தாக்கப்பட்டதால் மனமுடைந்த காஞ்சன் சவுத்ரி தானும் ஒரு போலீஸ் அதிகாரியாக பதவி பெற்று ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக படித்து முன்னேறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.