நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது..! ஒரே நாளில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.


நேற்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 159 ஆக இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்றும் வழக்கம் போல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்திற்கும் மேல் பதிவானது.

இதனால் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டிலேயே மராட்டியத்தில் தான் அதிக கொரோனா நோயாளிகள் உள்ளனர். அதற்கு அடுத்து தமிழகம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள உள்ளன.

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்த நிலையிலும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதனால் மக்கள் சுய பாதுகாப்புடன் இல்லை என்றால் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க முடியாது.