நியூஸிலாந்தை தெறிக்க விட்டு வென்ற இந்திய அணி!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேப்பியரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தெடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

 

நியூஸிலாந்து அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுஅந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்களை எடுத்தார்.

 

இந்திய அணியின் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷமி 3 விக்கெட்களையும், சஹால் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்

 

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கோஹ்லி தவானுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.

 

கோஹ்லி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய தவான் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை எடுத்தார். 34.5 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது. இதனால் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது