அடிலெய்ட் டெஸ்ட்! வீழ்ந்தது ஆஸ்திரேலியா! இந்திய அணி புதிய சாதனை!

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.


அடிலெய்டில் கடந்த 6ந் தேதி தொடங்கிய போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய புஜாரா சதம் அடித்தார். பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா ஆகியோல் தலா 3விக்கெட்டுகளை எடுத்தனர்.

   15 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடி இந்திய வீரர்கள் நிதானமாக ஆடி 307 ரன்கள் குவித்தனர். 2வது இன்னிங்சிலும் சிறப்பாக ஆடிய புஜாரா 71 ரன்கள் சேர்த்தார். அவருக்கு துணையாக ரஹானே 70 ரன்கள் எடுத்தார். இதனால் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை துவங்கியது. அந்த அணி வீரர்கள் அனைவருமே நிதான ஆட்டத்தை கடை பிடித்தனர்.



   ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை எளிதாக குவித்துக் கொண்டிருந்தனர். இதனால் இந்தியா – ஆஸ்திரேலியா என இரு தரப்புக்குமே மாறி மாறி வெற்றி வாய்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அஸ்வின், பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

   இதன் மூலம் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு, அருமையான வியூகம் வகுத்து பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை ஒருங்கிணைத்து கேப்டன் கோலி வெற்றியை எளிதாக்கினார்.