கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன செ•••ஸ்? நடு ரோட்டில் வைத்து இளம் ஜோடிக்கு சவுக்கடி! மயங்கிய பிறகும் தொடர்ந்த பரிதாபம்!

ஜகர்த்தா: திருமணத்திற்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட வாலிபருக்கு, மூச்சு திணற திணற கசையடி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தோனேஷியா நாடு, உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடாகும். இங்குள்ள சுமத்ரா தீவின் ஆகே பகுதியில், சூதாடுவது, மது அருந்துவது, ஓரினச்சேர்க்கை மற்றும் திருமணத்திற்கு முந்தைய உடல் உறவு உள்ளிட்டவை தண்டனைக்கு உரிய குற்றங்களாக பின்பற்றப்படுகிறது. இப்பகுதியில் இஸ்லாமிய மதத்தின் அனைத்து அம்சங்களும் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படுவதால் மக்கள் மிக ஒழுக்கமாக இருக்க வேண்டும். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் சமீபத்தில் திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் உறவு செய்ததாகக் கூறப்படுகிறது.  

இதற்கான ஆதாரங்களுடன் அந்த நபர் சிக்கிக் கொண்டதால், அவருக்கு, பொதுமக்கள் முன்னிலையில் 100 கசையடிகள் தர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மசூதி முன்னிலையில் அந்த இளைஞர் மற்றும் அவருடன் செக்ஸ் வைத்துக் கொண்ட இளம்பெண் உள்ளிட்டோருக்கு, 100 கசையடிகள் தரப்பட்டது. இதன்போது, சம்பந்தப்பட்ட இளைஞர் அடி தாங்க முடியாமல் கதறியபடி மயங்கி விழுந்தார். எனினும், அவரை அருகில் உள்ள மருத்துவமனை கொண்டு சென்று, முதல் உதவி அளித்தனர்.

அவருக்கு மயக்கம் தெளிந்ததும் உடனடியாக மீண்டும் தண்டனை இடத்திற்குக் கொண்டு வந்து கசையடியை தொடர்ந்தனர். பிறகு, அவர் மயங்கி விழ, மறுபடியும் முதல் உதவி அளித்து, பிறகு கசையடி கொடுத்தனர். இப்படி மாறி மாறி, ஒருவழியாக, 100 கசையடிகளை சொன்னபடி முடித்தனர். கதற கதற தப்பு செய்த நபருக்கு இப்படி கசையடி தரப்பட்ட சம்பவம் இந்தோனேஷியா மட்டுமின்றி உலகம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. அதேசமயம், திருமணத்திற்கு முன் செக்ஸ் செய்வது தவறா என்றும் கேள்வி எழத்தான் செய்கிறது...