திருமணத்துக்கு முன் பாலுறவு! கொத்து கொத்தாக சிறை செல்லப்போகும் இளைஞர்கள்! வந்தது அதிரடி சட்டம்!

இந்தோனேசியாவில் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு கொண்டாலோ, கள்ளக்காதல் செய்தாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இந்தோனேசியாவில் ஏசே மாகாணத்தில் ஷரியத் சட்டப்படி திருமணத்துக்கு முன் பாலியல் உறவு கொண்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணத்தை கடந்த பாலியல் உறவு கொண்டதாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு பொதுவெளியில் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து தண்டனையின் போது பெண் மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பதற்றம் நிலவும் நிலையில் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சட்டத்தை கூடிய விரைவில் நாடு முழுவதும் நிறைவேற்றப்பட வேண்டுமென நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் ஷரியத் சட்டப்படி திருமணமான பெண்ணை மற்றொரு நபர் கள்ளக்காதல் செய்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அல்லது 710 டாலர் அபராதம் விதிக்கப்படும். மற்றும் 18 வயதுக்குட்பட்டோரிடம் கருத்தடை குறித்து ஊக்குவித்தால் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.

ஆபாசமாக நடந்துகொண்டால் சிறை, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறை உள்ளிட்ட தண்டனைகள், வெளிநாட்டவருக்கும், இந்தோனேசியாவில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சில விதிவிலக்குகளைத் தவிர கருத்தடை செய்தால் அப்பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் அந்த சட்ட முன்வடிவு வகை செய்கிறது.

சமீபத்தில் அரசு சாரா அமைப்பு ஒன்று எடுத்தக் கருத்துக் கணிப்பில் இந்தோனேசியாவில் 40 சதவீத இளைஞர்கள் திருமணத்துக்கு முன் பாலுறவு கொள்வதாக தெரிவித்த நிலையில் ஷரியத் சட்டம் அமலுக்கு வந்தால் இந்தோனேசியாவில் உள்ள இளைஞர்கள் பலர் சிறையில் தான் இருப்பார்கள் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்த மாதிரியான கடுமையான சட்டதிட்டங்கள் அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.