விஷம் குடித்து தாய், தந்தை, 2 மகள்கள்! 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி! ஒரு பெண் மட்டும் பிழைத்த அதிசயம்!

சேலத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


சென்னை, சூளமேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 60). இவரது மனைவி அனுராதா (50). இவர்களுடைய மகள்கள் ஆர்த்தி (22), ஆஷிகா(20). சென்னையைச் சேர்ந்த இவர்கள்  விடுமுறைக்காக சேலம் வந்தனர். அவர்கள்  சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார்  விடுதியில்  தங்கியுள்ளனர்.

இன்று காலை விஜயகுமாரின்  இளைய மகள் ஆர்த்தி  அருகிலுள்ள  கடைவீதிக்குச் சென்றுஉள்ளார்  பின்னர்  அறைக்கு வந்து பார்த்தபோது அந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஆர்த்தி சிறிது நேரம் கதவை தட்டி பார்த்த போதும் கதவு திறக்கப்படவில்லை இதையடுத்து கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. உடனே பதறிப்போன ஆர்த்தி வரவேற்பு அறையில் இருக்கும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு எங்கள் அறை கதவு உள்ளே கூட்டியுள்ளது கதவைத் தட்டிய போதும் யாரும் திறக்கவில்லை என கதவை திறந்துவிடுமாறு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள், விரைந்து சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜயகுமார், அனுராதா, இளையமகள் ஆஷிகா ஆகியோர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.இந்த சம்பவம் குறித்து புதிய பஸ் நிலையத்தில் இருக்கும் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்ற நிலையில்உடனடியாக இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு வந்து, பிணமாக கிடந்த விஜயகுமார், அனுராதா, ஆஷிகா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அறையில் அவர்கள் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அந்த கடிதத்தில் கடன் தொல்லையில் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதி இருக்கிறார்கள் என தெரிவித்தனர். மேற்கொண்டு கடிதத்தில் உள்ள தகவலை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் உறவினர்கள் மத்த்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.