அன்புசெழியன் வீட்டில் 65 கோடி சிக்கியதற்கும், ரஜினியின் தர்பார் விநியோகஸ்தர் போர்க்கொடிக்கும் என்ன தொடர்பு தெரியுதா..?

இரண்டு நாட்களாக ஏ.ஜி.எஸ்.நிறுவனம், அன்புசெழியன் வீடு, நடிகை விஜய் வீடு ஆகிய இடங்களில் பரபரப்பாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அன்புச்செழியன் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் கட்டுக்கட்டாக 65 கோடி ரூபாயை பிடிபற்றிக் காட்டுள்ளது.


பிகில் படத்தின் வசூல் 300 கோடி என்று சொன்னதையடுத்தே இந்த ரெய்டு என்று சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல. ஆம், தர்பார் படம் நஷ்டம் என்று போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்களை மிரட்டத்தான் இந்த ரெய்டு என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் ரஜினியை திருப்திபடுத்தவே இந்த ரெய்டு என்கிறது இந்தப் பதிவு. வலைதளத்தில் களை கட்டும் பதிவு இது.   

" தர்பார்" திரைப்படத்தை வாங்கி விநியோகித்த தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், ரஜினி வீட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். "தர்பார்" திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால், தங்களுக்கு நேர்ந்த பெரும் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என அவர்கள் ரஜினியைக் கோரி வருகின்றனர், 

இதனால் திரைத்துறையினர் மத்தியிலும் - தமிழக மக்கள் மத்தியிலும் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயர் மற்றும் களங்கத்தைப் போக்கும் வகையில், மத்திய்அரசு, வருமான வரித்துறையை, மறைமுகமாக ஏவி விட்டுள்ளது.

இக்கட்டான இந்த நேரத்தில், ரஜினிக்கு உதவுவதன் மூலம், தங்கள் கட்சிக்கு ஆதரவாக அவரை அரசியலில் வளைத்து விடலாம் எனும் ஆரூடமே, மத்திய அரசின் இந்த அனுசரணைக்குக் காரணம் என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அறிவிலிகளா தமிழர்கள்?

ரஜினியின் இந்த நெருக்கடிக்குக் காரணம் எனக் கருதப்படும் விநியோகஸ்தர்களின் வீடுகளில் , இன்று காலையிலிருந்து வருமான வரித்துறையினரை வைத்து மத்திய அரசு

ரெய்டு நடத்தி வருகிறது. அதில் மிக முக்கியமாக, மதுரையைச் சேர்ந்த பிரபலமான சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. அன்புச்செழியன்தான் "தர்பார்" பட விநியோகஸ்தர்களுக்கு, பைனான்ஸ் கொடுத்தவர்.

எனவே, ரஜினிக்கு எதிரான இந்தப் போராட்டத்தை முறியடிக்க, அன்புச்செழியன் வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டினால், அன்புச்செழியனிடம் பணம் பெற்ற விநியோகஸ்தர்கள் அனைவரும் பயந்து விடுவார்கள் என்ற கணிப்பே , வருமானவரித்துறை நடத்தும் இந்த ரெய்டின் பின்னணி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !

ஓடாத தமது படத்தால் நேர்ந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே, குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார், கருத்துத் தெரிவிக்கிறார் என்பதை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளலாமே. அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னரே,

இந்த லட்சணம். இவர்தான், சிஸ்டமே மாற்றப்பட வேண்டும் என கூக்குரலிடுகிறார் என்று வேதனைப்படுகிறது அந்தப் பதிவு.