தாமரைக்கனியை அரசியலில் இருந்து காலி செய்வதற்காக ஜெயலலிதாவால் கொண்டுவரப் பட்டவர் அவரது அன்புப் புதல்வன் இன்பத்தமிழன்.
எடப்பாடியிடம் தாவிய இன்பத் தமிழன்! ஆச்சரியத்தில் டிடிவி!

எம்.ஜி.ஆர். காலத்தில் செல்வாக்குடன் இருந்த தாமரைக்கனி, ஜெயலலிதா காலத்தில் ஒண்ணுமே இல்லாமல் போனார். மகனுடன் போட்டிபோட்டு தோற்றும் போனார். தாமரைகனிக்கு ஏற்பட்ட அதே சோகம் இன்பத்தமிழனுக்கும் ஏற்பட்டது. ஆம், ஜெயலலிதா இன்பத்தமிழனுக்கு சீட் கொடுக்கவில்லை என்றதும் தி.மு.க.வுக்கு தாவினார். ஆனால், அங்கேயும் அவர் ஓரங்கட்டப்பட்டார். அதனால் வேறு வழியின்றி அ.தி.மு.க.வுக்குத் திரும்பிவந்தார்.
எடப்பாடியார் காலத்திலும் அவருக்கு எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை என்றதும், நேரடியாக தினகரனிடம் சென்று சரண் அடைந்தார். அவர் மட்டும் மரியாதை கொடுத்துவிடுவாரா என்ன? இன்பத்தமிழனை ஒரு குப்பை போலத்தான் நடத்திவந்தார். அதனால், என்ன செய்வது என்று புரியாமல் இருந்த இன்பத்தமிழன், இப்போது அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்னைகளை பயன்படுத்தி, உள்ளே நுழைந்துவிட்டார். இவரால ஒரு இடத்துல ரெண்டு வருஷத்துக்கு மேல இருக்க முடியாதுப்பா என்று அவரது உறவுகளே இன்பத்தமிழனை விரட்டி அடிக்கின்றன.
ஆனால், இன்பத்தமிழன் விவகாரம் தினகரனுக்கு அதிர்ச்சியாகவே இல்லையாம். கடந்த ஞாயிறு அன்றே இன்பத்தமிழன் தாவப்போகும் தகவல் தினகரனுக்குத் தெரியவந்ததாம். அப்போது உண்மையிலே ஆச்சர்யம் விலகாமல், ‘அவர் நம்ம கட்சியில்தான் இத்தனை நாளும் இருந்தாரா?‘ என்று ஆச்சர்யமாகக் கேட்டாராம். தினகரன் குசும்பு சும்மா விடுமா?