ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகும் இன்பதுரை..!

வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்காமல், புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இருந்து விலகி பரணி கார்த்திகேயன் தன் ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் இணையும் விழா நடைபெற்றது. அப்போதுதான் ராதாபுரம் விவகாரத்தைக் கையில் எடுத்தார் ஸ்டாலின்.

ராதாபுரம் தபால் ஓட்டு விவகாரத்தில் வாக்குகள் எண்ணப்படலாமே தவிர, முடிவு அறிவிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த விஷ்யம் தெரிந்தும் ஸ்டாலின் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்து, இன்பதுரையை துன்பதுரை என்று அழைத்தார்.

அதாவது ராதாபுரம் தொகுதியில் அப்பாவு வென்று எம்.எல்.ஏ. ஆவதால், இன்பதுரை தோல்வியடைந்து தன்பப்படப் போகிறார் என்பதைத்தான் தெளிவாகச் சொன்னார். அங்கு தி.மு.க. வெற்றிபெற்றுவிட்டது என்பதை தெளிவாக அறிவித்துவிட்டார்.

இந்த விவகாரத்தைத்தான் இன்பதுரை கையில் எடுத்துள்ளார். ராதாபுரம் தொகுதியின் 201 தபால் வாக்குகளிலும் ஒரே தலைமை ஆசிரியரே அட்டெஸ்டேசன் கையெழுத்துப் போட்டுள்ளார். அதனால்தான் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. இந்த நிலையில் ஸ்டாலின் பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்று புகார் கொடுக்க தயாராகிவருகிறார்

ஸ்டாலினுக்கு இது தேவையா என்பதுதான் தி.மு.க.வினர் சொல்லும் கருத்து.