திடீரென தந்தை மரணம்! இறுதிச் சடங்கிற்கு செல்லாமல் பொதுத் தேர்வு எழுதிய மாணவி! நெகிழ வைக்கும் காரணம்!

12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் லட்சியக் கனவை நிறைவேற்றும் உறுதியோடு தந்தை இறந்த நிலையிலும் பொதுத் தேர்வு எழுதினார்.


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. திருச்செந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஐயப்பன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தந்தையின் இழப்பு மனதை பாதித்தாலும் ஜெயஸ்ரீயின் லட்சிய உறுதியை பாதிக்கவில்லை. தான் கணினி துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் தனது தந்தையின் லட்சியக் கனவும் என்றும் அதனை நிறைவேற்ற உறுதியுடன் படித்துவந்ததாகவும் கூறுகிறார் ஜெயஸ்ரீ.

ஐயப்பனின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. ஆனால் அதனைக் கருதி முன்வைத்த காலை பின்வைக்காத ஜெயஸ்ரீ பிளஸ்டூ வேதியல் தேர்வை எழுத தேர்வு மையத்துக்கு சென்றார். ஜெயஸ்ரீ தேர்வு எழுதும் வரை காத்திருந்த உறவினர்கள், பின்னர் அவரை தந்தையின் இறுதிச்சடங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

இறந்தவருக்காக அழுது புலம்புவதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் தந்தையின் லட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மாணவி பாராட்டுக்குரியவர்.