திமுக எம்எல்ஏ மீதான கொலை வழக்கு! பொன்னேரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மீனவர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் இன்று பொன்னேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


2006ஆம் ஆண்டு திருவொற்றியூரை சேர்ந்த மீனவர் ஒருவர் மாயமானர். அவரை கடத்தி கடலில் சென்று அப்போதைய மீன்வளத்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான கேபிபிசாமி கொலை செய்துவிட்டார் என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த மீனவரின மனைவி அளித்த புகாரின் மீது திமுக ஆட்சியில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அப்போது அந்த மீனவரின் மனைவி மீண்டும் புகார் அளித்தார். இதனை அடுத்து இந்த வழக்கில் கேபிபி சாமி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கேபிபி சாமியின் தம்பியும் கைது செய்யப்பட்டார். பிறகு அவரக்ள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 13 வருடங்களாக நிலுவையில் இருந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி கேபிபி சாமி உள்ளிட்ட 7 பேருக்கும் எதிராக போலீசார் போதுமான சாட்சிகளை சமர்பிக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் ஏழு பேரையும் விடுதலை செய்தும் அவர் உத்தரவிட்டார் 

கே.பி.பி.சாமி தற்போது திருவொற்றியூர் எம்எல்ஏ வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் திமுக மீனவர் அணியிலும் உயர் பொறுப்பில் இருக்கிறார். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் கேபிபி சாமி மீதான கொலைப்பழி நீங்கியுள்ளது.