பக்கத்தில் இம்ரான் கான்! ஆனாலும் பாகிஸ்தானுக்கு சுளுக்கெடுத்த மோடி! கிர்கிஸ்தான் பரபரப்பு!

பாகிஸ்தான் பிரதமரை அருகே வைத்துக் கொண்டு அந்நாட்டை தீவிரவாத நாடு என்று பிரதமர் மோடி கிழித்து தொங்கவிட்டுள்ளார்.


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக்கில் நடைபெற்றது. இந்தமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்று மோடி கூறினார். மேலும் மோடி பேசியதாவது: அண்மையில் இலங்கை சென்று இருந்தேன். அப்போது குண்டுவெடிப்புக்கு ஆளான தேவாலயத்திற்கு சென்று இருந்தேன். அங்கு பயங்கரவாதத்தின் கோர முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தீவிரவாதத்தை ஊக்குவித்து தீவிரவாதம் வளர நிதி அளிக்கும் நாடுகள் தான் தீவிரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளித்து, நிதி அளித்து அண்டை நாடுகளின் அமைதியை கெடுக்கும் நாடுகளை ஷாங்காய் கூட்டமைக்கு கண்டிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

அதாவது மோடி தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று கூறியது பாகிஸ்தானைத் தான். இத்தனைக்கும் மாநாட்டில் மோடி பேசிய போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவருக்கு அருகே தான் அமர்ந்திருந்தார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானுக்கு சுளுக்கு எடுத்துள்ளார் மோடி.