புத்தாண்டில் வைகோ மகனுக்கு கட்சியில் முக்கியப் பதவி! வாரிசு அரசியலில் வைகோவும் இறங்குகிறார்!

வாரிசு அரசியலுக்கு எதிராக ஒரு கட்சியே தொடங்கியவர் வைகோ. கட்சியில் ஸ்டாலினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.


ஏராளமான மா.செ.க்கள் வைகோவை பின் தொடர்ந்தனர். ஆனால், காலம் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக கட்சி தேய்ந்துபோனது. மாறி, மாறி கூட்டணி வைத்து வைகோ என்றாலே நகைச்சுவை நடிகர் என்று மாறிப்போனார். அவர் எங்கே கால் வைத்தாலும் அந்த இடம் உருப்படாது என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் அவரது கட்சியில் மட்டும்தான் வாரிசு அரசியல் கிடையாது. அந்தக் குறையும் தனது கட்சியில் இருக்கக்கூடாது என்று வைகோ நினைத்துவிட்டாராம். அதனால், வரும் ஜனவரி மாதம் அவரது மகன் துரை வைகோவுக்கு கட்சியில் முக்கியப் பதவி கொடுக்க தீர்மானித்து இருக்கிறாராம்.

அதற்கு முன்னோட்டமாக வைகோ கட்சியில் இருந்து 2020ம் ஆண்டுக்கு வெளியிடப்பட்டுள்ள காலண்டரில் வைகோ, அவரது அம்மா, அவரது மகன் ஆகியோரின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது. சூப்பருண்ணா.