கொரோனா என்ற ஒரு கொடூர கிருமி இன்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதை கண்டு பயந்து கொண்டே இருப்பதைவிட அதை அண்டவிடாமல் இருப்பதற்கு நம் உடலை திடப்படுத்த பிரபல மருத்துவமனை வெளியிட்ட உணவு பட்டியல் இதோ..
கொரோனாவை விரட்டி அடிக்க நாம் சாப்பிட வேண்டிய பழங்கள், காய்கறிகள்! பிரபல ஹாஸ்பிடல் வெளியிட்ட பட்டியல்!

பிரபல மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனை பொதுநல அக்கறையுடன் கொரோனாவால் பயந்துகொண்டிருக்கும் மக்களுக்காக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
பழங்கள் : ஆரஞ்சு / சாத்துக்குடி, அண்ணாச்சி பழம், பப்பாளி, கிவி, கொய்யாப்பழம், தக்காளி பழம்.
காய்கறிகள் : கேரட் / பீட்ரூட், கீரைகள்/ பாலக், முட்டைக்கோஸ், காலிபிளவர், ப்ராக்கோலி, கத்திரிக்காய், குடைமிளகாய்.
பாதாம் (இரவில் ஊறவைத்தது), வால்நட்.
எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, மஞ்சள், பச்சை தேயிலை தேநீர்.
நீர் அகாரம் : ஒரு நாளைக்கு 2.5 - 3 லிட் (குடிநீர், தேங்காய் தண்ணீர், வீட்டிலே தயார்செய்த வைட்டமின் சி பழங்களின் சாறு, பால் & மோர்)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொண்டு உங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.