காதல் கணவனுக்கு அல்வா! அண்ணனுடன் தகாத உறவு! இளம் பெண் செயலால் சிதைந்த குடும்பம்!

சுசீந்திரம் அருகே அண்ணன் முறை வாலிபருடன் இளம்பெண் 2 குழந்தைகளை விட்டு ஓட்டம்.


சுசீந்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார், பின்பு வீட்டை எதிர்த்து திருமணமும் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் அவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால், அவரது சகோதரி நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தார்.

சமீபத்தில் அந்த சகோதரி அந்த வாலிபரை சந்தித்து உறவை புதிப்பித்து கொண்டார். இதையடுத்து காதல் தம்பதியை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். சகோதரியின் விருப்பத்தை ஏற்று, அவர் தன் காதல் மனைவியுடன் அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு சகோதரியின் கணவர் வாலிபரின் மனைவியுடன் அன்பாக பேசி கொண்டிருந்தார்.

ஆனால் அவர்கள் இருவரும் எல்லை மீறிய பழக்கத்தில் இருந்தனர். அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சகோதரி அதிர்ந்து போனார் அவர் உடனே தன் குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து தனியே சென்று விட்டார்.குடும்பம் இந்த அளவிற்கு சிதைந்து போக காரணம் தன் மனைவி என்பதை அறிந்த வாலிபர், மனைவியை அழைத்து கண்டித்து உள்ளார்.

அதையும் மீறி அவர்களின் பழக்கம் எல்லை மீறி சென்றது கணவன் கண்டித்ததை அவள் கேட்கவில்லை. னைவி  கணவனை  பிரிந்து  சென்று, அண்ணன் உறவு முறை உள்ளவருடன்  சென்று  அவருடன் வாழ ஆரம்பித்தார். இதை  பற்றி  பெண்ணின் கணவர்  நாகர்கோவில்  அணைத்து மகளிர்  போலீசில்  புகார் அளித்தார்.

அதில் அவர் தன் மனைவி அவரது சகோதரியின் கணவனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளார். அவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை அவர்கள் இருவரும் துன்புறுத்துவதாக போலீசில் புகார் கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக நாகர்கோயில் அணைத்து மகளிர் போலீசில் விசாரணை நடத்தினர்.

 இதற்கு நேற்று மகளிர் போலீசார் கள்ளகாதலர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவர்களை பிடித்தனர்.  பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர். அங்கு, அந்த பெண் தனக்கு தன் கணவர் வேண்டாம் என்றும் கள்ளகாதலனே போதும் என்று கூறினார் இதையடுத்து போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.