அவளுக்கு 45 வயசு..! அதான் அவள் 20 வயது மகளையும் கேட்டேன்..! 25 வயது இளைஞன் மீதான பெண்ணின் சபலத்தால் ஏற்பட்ட பயங்கரம்!

நாமக்கல்: கள்ளக்காதலை தட்டிக் கேட்ட கணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.


நாமக்கல் மாவட்டம், வெண்ணாந்தூரில் தினசரி மார்க்கெட் பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55 வயது). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கு வசந்தா (45 வயது) மற்றும் 21 வயதில் ஒரு மகன் மற்றும் 20 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவரது மனைவி வசந்தா, குடும்ப கஷ்டத்தைப் போக்க பரிகாரம் செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்கிற ராம்ஜெத்மலானியை சந்தித்து உதவி கேட்டுள்ளார். இதன்பேரில், ராமச்சந்திரனுக்கும், வசந்தாவிற்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.  

அடிக்கடி வசந்தாவின் வீட்டிற்கே வந்து உல்லாசம் அனுபவித்துச் சென்ற ராமச்சந்திரன், ஒரு கட்டத்தில், வசந்தாவின் 20 வயது மகளையும் அடைய தீர்மானித்துள்ளார். இதற்காக, வசந்தாவிடம் அனுமதி கேட்க, அவரோ மறுக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் சமீபத்தில் நேரடியாக, வசந்தாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அவரது கணவர் கிருஷ்ணன் இருந்துள்ளார். அவரை பார்த்ததும் ராமச்சந்திரன் குழம்பி தவிக்க, கிருஷ்ணன் சந்தேகப்பட்டு விசாரித்துள்ளார். இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் முற்றவே, ராமச்சந்திரன் திடீரென கத்தியால் கிருஷ்ணனை குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து, வழக்குப் பதிந்த ராசிபுரம் போலீசார் ராமச்சந்திரனை பிடித்து சிறையில் அடைத்தனர்.