நடுரோட்டில் பிளாஸ்டிக் பையில் பச்சிளம் குழந்தை! கடித்துக்குதறிய நாய்கள்! திருமணத்திற்கு முன்பே தவறான உடல் சார்ந்த தேடலின் பயங்கரம்!

பீஜிங்: பிளாஸ்டிக் பையில் வைத்து புதரில் வீசப்பட்ட பச்சிளங்குழந்தையை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தைவான் நாட்டைச் சேர்ந்தவர் சியாவோ மெய் என்ற 19 வயது பெண். இவர், ஆன்லைனில்  ஒருவருடன் நெருங்கிப் பழகி அவரையே திருமணமும் செய்துகொண்டார். எனினும், திருமணத்திற்கு பின் இருவரும் பணம் இன்றி வறுமையில் வாட தொடங்கினர். இதற்கிடையே இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது.

ஆனால், அதன்பின் இவர்கள் 2 பேரையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில் நண்பர்கள் போலீசில் புகார் தர, விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் வேறொரு நகரில் தலைமறைவாக வசிப்பதை கண்டுபிடித்தனர்.  

இது தவிர, அவர்களுக்குப் பிறந்த குழந்தை என்ன ஆனது என்று விசாரித்ததில், வறுமை காரணமாக அந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து புதர் ஒன்றில் வீசிவிட்டதாக, அவர்கள் கூறியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த போலீசார், இதன்பேரில் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது குழந்தையின் சில எலும்புகள் மட்டும் கிடைத்திருக்கின்றன. தெருநாய்கள் கடித்துச் சென்றிருக்கலாம் அல்லது குழந்தையின் பெற்றோரே அதனை கொன்று வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.