உல்லாசமாக இருந்த கள்ளக் காதல் ஜோடி! நேரில் பார்த்த மூதாட்டி! பிறகு நேர்ந்த பயங்கரம்!

2 பேர் கள்ளக்காதல் செய்ததை நேரில் பார்த்த மூதாட்டி பரிதாபமாக கொலை செய்யப்பட்டார்.


துறையூர் அருகே உள்ள ஓசரப்பள்ளி காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (68 வயது). கணவனை இழந்த நிலையில் இவர் தனிமையில் வசித்து வந்தார். கடந்த மாதம் 26ம் தேதி முதல் இவரை காணவில்லை எனக் கூறி, மகள் ரேணுகா உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார்,  சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து கண்ணம்மாளை சடலமாக மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.

இந்நிலையில், கண்ணம்மாளை காணவில்லை என்ற தகவலை முதன் முதலில், அவரது அண்டை வீட்டில் வசிக்கும் அமுதா என்பவர்தான், ரேணுகாவிடம் தெரிவித்திருக்கிறார். அவரை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், பல அதிர்ச்சி தகவல் வெளியாகின.

இதன்படி, அமுதா கள்ளக்காதலன் தமிழ்மாறனுடன் உல்லாசமாக இருந்ததை, கண்ணம்மாள் நேரில் பார்த்துவிட்டாராம். இதையடுத்து, கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணம்மாளை தலையணையை அமுக்கிக் கொன்று, உடலை கிணற்றில் வீசிவிட்டதாக, அமுதா கூறியுள்ளார்.

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜ்ர்படுத்தினர். அவர்களுககு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் துறையூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.