கள்ளக் காதலியின் மகளுக்கு மோக வலை! உடன்படாததால் கள்ளக்காதலன் செய்த வெறிச் செயல்!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கள்ளக்காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


ஒரத்தநாடு பகுதியில் கணவனை இழந்த நாகம்மாள் என்பவருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் உல்லாசமாக பழகி வந்ததை தெரிந்து மிக மனஉளைச்சலுக்கு ஆளான நாகம்மாளின் மகள்கள் ராஜேந்திரனை கண்டித்துள்ளனர். ஆனால் இதை பொருட்படுத்தாத ராஜேந்திரன் அடிக்கடி குடிபோதையில் நாகம்மாளின் வீட்டுக்கு வந்து அவரின் மகள்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது

இதனால் மனமுடைந்த மூத்த மகள் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒரத்த நாடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே தனது மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்த நாகம்மாளை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். குடிபோதையில் ராஜேந்திரன் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகம்மாளுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த ஒரத்தநாடு காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜேந்திரன் மீது புகார் அளித்த உடனே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் நாகம்மாள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்திருந்தனர்.

எது எப்படியோ 3 மகள்கள் மற்றும் ஒரு மகனை கரைசேர்க்க வேண்டிய கடமை இருக்கும் நாகம்மாள் கட்டில் சுகத்துக்கு ஆசைப்பட்டு தற்போது மருத்துவமனை கட்டிலில் சிகிச்சை பெறுவது மற்ற பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தடம் மாறும் உறவால் ஏற்படும் விபரீதங்கள் தங்கள மட்டும் அல்லாமல் தங்களது பெண் பிள்ளைகளையும் எதிர்காலத்தில் பாதிக்கும் என்பதை தடம் மாறுபவர்கள் உணர்வார்களா என்ற கேள்விக்கு பதில் சமூகம் எனும் நம்மிடம் தான் உள்ளது.