தாயுடன் நெருக்கமாக இருந்த இளைஞர்! நேரில் பார்த்த மகள்! பிறகு அரங்கேறிய கொடூரம்!

வேலூர் மாவட்டத்தில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த பெண் குழந்தைக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த கொடூர சம்பவம் நெஞ்சை அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது.


வேலூர் மாவட்டம் அரியூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவருடன் வாழாமல் தனியாக வாழ்ந்து வந்தார். அவரது மகளை தாய் வீட்டு கண்காணிப்பில் விட்டு வைத்து இருந்தார். இந் நிலையில் அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் அந்த பெண் தனியாக இருப்பதை கவனித்து உள் நோக்கத்துடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இவர்களது நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் உறவாக மாறிப் போனது. இதற்கிடையே அந்த பெண்ணின் தாய் திடீரென இறந்து விட்டதால் தனது மகளை தான் வசிக்கும் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார் அந்தப் பெண். பெண் மட்டும் தனியாக இருந்து எந்த இடையூறும் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்த உதயகுமாருக்கு வீட்டில் சிறுமியின் வருகை மனக் கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியின் வருகையை பெரிய இடையூறாக கருதினார் உதயகுமார். மேலும் இவர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை அந்த சிறுமியும் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை சிறுமி வெளியில் சொல்லி விடும் என்று பயந்து போன உதயகுமார் பெண் குழந்தை என்றும் பாராமல் அவளை கொல்வதற்கு திட்டமிட்டார்.

அந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக உடல் முழுவதும் சூடு வைத்துள்ளான் அந்தக் கயவன்.  வீட்டில் இருந்த சிறுமி சூடு தாங்க முடியாமல் அடிக்கடி அழுது வந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் என்னவென்று விசாரிக்க வந்துள்ளனார். அப்போதுதான் உதயகுமார் அங்கு வந்து அந்த பெண்ணுடன் சல்லாப வாழ்க்கை வாழ்ந்ததை அக்கம் பக்கத்தினர் தெரிந்து கொண்டனர்.

இதை அடுத்த போலீசாருக்கு தகவல் தந்த கிராம மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் அனைத்து உடல் பாகங்களிலும் சிகெரெட்டாலும், கம்பியாலும் சூடு வைத்தது மட்டுமின்றி அந்த ரணம் ஆறாமல் சாகவேண்டும் என்பதற்காக மரக்குச்சியை வைத்து காயத்திலேயே கிளறி உள்ளதாகவும் தெரிவித்தது கல் நெஞ்சையும் கரைய வைத்தது. 

இதற்கிடையே சிறுமியின் தாயை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மன்மத அம்பான உதயகுமாரை தேடி வருகின்றனர்