உண்ட வீட்டுக்கு ரெண்டகம்! அண்ணன் மனைவியை கரெக்ட் செய்த கொளுந்தன்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

அண்ணியுடன் தவறான உறவு வைத்திருந்த ஒருவர், அதனை தனது சகோதரர் கண்டித்ததால் அந்தப் பெண்ணை 3 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.


ககாரியா மாவட்டத்துக்குட்பட்ட ஜந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்,ஹைபத்பூர் என்ற இடத்தில் பான் கடை வைத்திருந்த தனது அண்ணன் ஜனார்த்தனன் வீட்டில் இவர் தங்கியிபடி வேலைக்கு சென்று வந்தார். இவர் அண்மையில் தால் ஜந்தாபூருக்கு வந்து காய்கறிக் கடை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தனது அண்ண வீட்டில் தங்கியிருந்த ரமேஷூக்கு அண்ணன் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த அவரது அண்ணன் ஜனார்த்தன் ரமேஷை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் திடீரென நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அண்ணியிடம் சென்று தனியாக சென்று குடும்பம் நடத்தலாம் என்று அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அண்ணி மறுத்துள்ளார். இதனால் வீட்டுக்கு சென்ற மூன்று முறை அண்ணியை துப்பாக்கியால் சுட்டு  விட்டுத் தனது இடத்துக்கு திரும்பிவந்ததாகவும் கூறப்படுகிறது. 

ரமேஷ் தனது வீட்டில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தொடர்புடைய பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.