மருமகன்களை வளைத்துப் போட்ட மாமியார்! அதிர்ச்சியில் கணவன் மரணம்! தட்டிக் கேட்ட உறவினருக்கு நேர்ந்த விபரீதம்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

தகாத உறவு வைத்திருந்ததற்காக தட்டிக்கேட்ட உறவினரை மருமகளுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.


ஆந்திராவின் குண்டூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மருமகன்களுடன் இந்தப் பெண் நீண்ட நாட்களாக தகாத உறவு வைத்திருந்துள்ளார். 

இந்த விவகாரம் தெரிந்துகொண்ட கணவர், தனது மனைவியிடம் "இந்த அசிங்கம் மகள்களுக்கு தெரியவந்தால், எதிர்காலம் பாதித்துவிடும்" என கேட்டதற்கு தரக்குறைவாக பேசி அனுப்பியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட கணவரின் உறவினர் ஸ்ரீநிவாசன் என்பவர் அவரின் மனைவியிடம் இதுகுறித்து சந்தித்து பேசியதோடு மருமகன்களிடமும் இதனை நிறுத்திக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். 

இவரின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மனைவி, தனது மருமகனுடன் சேர்ந்துகொண்டு சீனிவாசனை கொலை செய்திருக்கின்றனர். இதை தெரிந்து கொண்ட ஸ்ரீனிவாசனின் மனைவி சுகுனம்மா என்பவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதற்கிடையே அளித்த புகாரை திரும்ப பெறுமாறு பெண்ணின் மருமகன்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்தும் சுகுனம்மா காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்திருக்கிறார். 

இதை அறிந்த போலீசார் குறிப்பிட்ட பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளனர்.