நண்பன் ஜெயக்குமார் மனைவியை மடக்கிப் போட்ட வடிவேலு! தகாத உறவால் கலையரசிக்கு நேர்ந்த விபரீதம்!

தஞ்சையை அடுத்த அதிராம்பட்டினம் அருகே ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட கள்ளக்காதல் ஜோடி தங்கள் உடல்களை சேர்த்தே புதைக்கக் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி வைத்துள்ள்னர்.


அதிராம்பட்டினத்தை அடுத்த ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமாரின் மனைவி சத்துணவு அமைப்பாளரான கலையரசி. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில் 13 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்

அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி வடிவேலு ஜெயக்குமாருக்கு நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். இதனால் அடிக்கடி ஜெயக்குமார் வீட்டுக்கு வடிவேலு வந்து சென்றுள்ளார்.

அப்போது வடிவேலு - ஜெயக்குமாரின் மனைவி கலையரசி இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அண்ணா, தங்கை என்று பேசியதால் முதலில் ஜெயக்குமாருக்கு சந்தேகம் வரவில்லை.

பின்னர் இருவரும் நெருக்கமாக இருப்பதாக அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளனர். வடிவேலுவுக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 வயது மகனும் உள்ளனர்.  இந்த நிலையில் கலையரசிக்கும், வடிவேலுவுக்குமான கள்ளத்தொடர்பை கண்டித்த  ஜெயக்குமார் , அதனை மனைவி கலையரசி கேட்காததால் விவாகரத்து செய்தார். 

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிய இருவரும்  கிழக்கு கடற்கரை சாலை அருகில் வயலில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். மக்கள் அங்கு சென்று பார்த்த போது வடிவேலு இறந்துகிடந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கலையரசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

இந்நிலையில் வடிவேலின் சட்டை பையில் இருந்த கடிதத்தில், 'எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அன்பால் இணைந்த நாங்கள், இங்கு வாழ முடியவில்லை. எனவே, ஒன்றாக சாகிறோம்; எங்களை ஒன்றாக புதையுங்கள்' என எழுதப்பட்டிருந்தது.