கணவன் மனைவியாக வாழ்ந்த கள்ளக்காதலர்கள்! மரணத்திற்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை!

சேலம் அருகே கள்ளக்காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வீட்டை விட்டு ஓடிப்போன கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது.


சேலம் மாவட்டம் ரெட்டியூரைச் சேர்ந்தவர் கோபிநாத் . இவரும்,  ராஜேஸ்வரி என்ற பெண்ணும் கணவன் - மனைவி என்று கூறிக் கொண்டு தியாகதுருகத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாத நிலையில் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

வீட்டின் உரிமையாளரிடம் கோபிநாத் கொடுத்திருந்த முகவரியைக் கொண்டு தியாக துருகம் போலீசார், சேலம் போலீசாரைத் தொடர்பு கொண்டபோது இருவரையும் காணவில்லை என பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கோபிநாத்தின் மனைவி  உமாவும், அழகாபுரம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரியின் கணவர் முல்லைவேந்தனும் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

தச்சுத்தொழில் செய்து வரும் கோபிநாத் சில மாதங்களுக்கு முன்பு முல்லைவேந்தன் வீட்டுக்கு வேலைக்கு சென்றதாகவும் அப்போது ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை முல்லைவேந்தன் கண்டித்ததால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் செல்ல அங்கு அவர்களது கள்ளக் காதல் தொடர்ந்தது. 

இதனை அறிந்த கோபிநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கள்ளக் காதலர்கள் இருவரும் கடந்த 19-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி தியாகதுருகத்தில் வீடு எடுத்துத் தங்கியதும், மன உளைச்சலால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.