இலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக சென்னை புதுமண தம்பதி உயிர் தப்பினர்.
இலங்கை குண்டுவெடிப்பு! தேனிலவுக்கு சென்ற சென்னை புதுமணத் தம்பதி நூலிழையில் தப்பிய அதிசயம்!

சென்னை புதுமண தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர்கள் இனியன், கீதாஞ்சலி. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக இலங்கைக்கு கடந்த 19-ஆம் தேதி கொழும்பு சென்றனர்.
இருவரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஹோட்டல்களில் ஒன்றான கிங்ஸ்பரி ஸ்டார் ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இதனால் இவர்கள் தப்பியுள்ளனர்.