எனக்கு ஓட்டுப் போடவில்லை என்றால்! முஸ்லிம்களை பகிரங்கமாக மிரட்டிய மேனகா காந்தி!

தனக்கு ஓட்டுப் போடவில்லை என்றால் எனக் கூறி மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான மேனகா காந்தி முஸ்லிம்களை மிரட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.


மத்திய அமைச்சர் மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் மேனகா காந்தி பங்கேற்று பேசுகிறார். இப்போது சுல்தான்பூரில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதாக மேனகா காந்தி கூறுகிறார்.

முஸ்லிம்கள் ஓட்டு போடவில்லை என்றாலும் கூட தான் சுல்தான்பூரில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று மேனகா காந்தி அந்த வீடியோவில் தெரிவிக்கிறார். தனக்கு முஸ்லிம்கள் என்றால் மிகவும் பிடிக்கும்  என்பதால்தான் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் எனவே முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் மேனகா காந்தி கூறுகிறார்.

எந்தப் பகுதியில் தனக்கு அதிகம் போட்டுவிடுகிறது எந்த பகுதியில் தனக்கு அதிக மூட்டைகளை வில்லை என்பதை தன்னால் கண்டுபிடிக்க முடியும் என்பதால் முஸ்லிம்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை என்றால் ஏதேனும் வேலை கேட்டு என்னிடம் முஸ்லிம்கள் வரவே முடியாது. இதனை மனதில் வைத்துக்கொண்டு ஓட்டு போடுங்கள். இவ்வாறு முஸ்லிம்களை மிரட்டும் வகையில் மேனகா காந்தி பேசியுள்ளார்.

மேனகா காந்தியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்படியாக மேனகா காந்தியை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.