மோடி செஞ்சது தப்புன்னா, காங்கிரஸ் செஞ்சது எல்லாம் சரியா?

காஷ்மீர் விவகாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நேரத்தில், மக்களின் கருத்தைக் கேட்காமல் இப்படிப்பட்ட அராஜக முடிவு எடுத்தது தவறு என்று காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது.


அப்படியென்றால் காங்கிரஸ் செய்தது எல்லாம் சரியா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அப்படி என்னதான் காங்கிரஸ் செய்தது என்று கேட்கிறீர்களா..?

தமிழக மக்களிடம் கேட்டா நமது கட்சத் தீவை காங்கிரஸ் கட்சி, இலங்கைக்கு தாரை வார்த்தது? மக்களிடம் கேட்டா இந்திராகாந்தி நம் நாட்டில் எமர்ஜென்சியை அமுல் படுத்தினார். தமிழக மக்களை கேட்டா இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு ராஜீவ்காந்தி அனுப்பினார்?

.தமிழக மக்களை கேட்டா பல லட்ச இலங்கை தமிழர்களை கொள்வதற்கு காங்கிரஸ், திமுக இலங்கை அரசுக்கு உதவியது? காஷ்மீர் மாநிலத்தில் இரட்டை குடியுரிமை கொண்ட மக்கள் பாகிஸ்தானிலும் குடியேறலாம் என்ற உண்மையை தெரிந்து தான் பேசுகிறீர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறீர்களா?

காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பெண்ணை, பாகிஸ்தான் ஆண் திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கவேண்டும். இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர் என்ற உண்மையை தெரிந்து தான் பேசுகிறீர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறீர்களா?

நமது வரிப் பணத்தில் இலவசங்களை அனுபவித்து விட்டு, நமது தேசிய சின்னங்களை அவமதித்து, நமது பாதுகாப்பு படை வீரர்களை அவமானப்படுத்திய உண்மை எல்லாம் தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை வளரும்போது, அதை தீர்க்க நிரந்தர திட்டம் தீட்டுவதுதானே முறை என்று பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ்காரர்களே பதில் சொல்ல வாங்கப்பா.