ஐசிசி 2018 விருது பட்டியல் : விருதை தட்டி சென்ற ரிஷாப் பாண்ட்!

ஐசிசி 2018ம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் விராட் கோஹ்லி 3 முக்கிய விருதுகளை பெற்று ஹாட்ரிக் சாதனை செய்துள்ளார்.


இதில் ரிஷாப் பாண்ட்க்கு ஐசிசி சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வழங்கியுள்ளது. ஐசிசி போட்டியில் சிறந்த பேட்டிங்கை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெளிப்படுத்தியதன் காரணமாக ஆரோன் பின்ச்சிற்கு (ஆஸ்திரேலியா) வழங்கியுள்ளது.

இவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்கள் குவித்ததே இந்த விருதை பெற காரணமாகி அமைந்தது. Spirit of Cricket விருது நியூஸிலாந்து அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் ஐசிசி ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்துள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் விராட் கோஹ்லி கேப்டன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் போட்டிக்கான அணியில் இந்திய அணியிலிருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விராட் கோஹ்லி ,ரோஹித் சர்மா , குல்தீப் யாதவ், பும்ரா இடம் பிடித்துள்ளனர். டெஸ்ட் அணியில் விராட் கோஹ்லி, ரிஷாப் பாண்ட் மற்றும் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடுவருக்கான விருது குமார் தர்மசேன அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது