அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,
எதிரிகளையும் துரோகிகளையும் வெல்ல என்னிடம் உள்ள ஆயுதம்! சஸ்பென்ஸ் வைத்து எடப்பாடியை தெறிக்கவிடும் டி டிவி!
எதிரிகளையும் துரோகிகளையும் விரட்ட எனக்கு கிடைத்த ஒரே ஆயுதம் 59 வேட்பாளர்கள் தான் எந்த சின்னமாக இருந்தால் என்ன , ஆர்.கே.நகரில் மக்களை எங்களை புது சின்னத்தில் வெற்றிபெற வைக்கவில்லையா? நாடாளுமன்ற தேர்தல் இடைத்தேர்தல் என மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அவர்களுக்கு எந்த சின்ன ஒதுக்கினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது உறுதி.
வல்லவனுக்கு புல்லும் ஆய்தம் என்பது போல எந்த சின்னமாக இருந்தாலும் நாங்கள் வெற்றி தான், அதற்கு உதாரணமாக ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தை வெற்றி பெற செய்தது போல, இந்த தேர்தலிலும் எந்த சின்னமாக இருந்தாலும் எங்களை மக்கள் வெற்றி பெற செய்வார்கள். தற்போது தேர்தலில் மும்முரமாக உள்ளோம், தேர்தல் முடிந்த பின்பு இரட்டை இலை வழக்கு குறித்து அடுத்தகட்ட நகர்வை பார்ப்போம்.
59 வேட்பாளர்கள் அதிமுகவில் உள்ள எதிர்களையும்! துரோகிகளையும்! விரட்ட போகும் ஒரு ஆயுதம்,உச்சநீதிமன்றம் சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நியாயம் தான் கொடுத்து உள்ளது. மக்கள் மனது வைத்தாள் யாராக இருந்தாலும் வெற்றி பெற முடியும் அது அமமுகவுக்கும் பொருந்தும்.
குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் வெற்றி பெறுவோம் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னம் தமிழக மக்களின் வெற்றி சின்னம் என்றும் தெரிவித்தார் அதிமுக அமைத்துள்ள கூட்டணி தோல்வி கூட்டணி என விமர்சனம் செய்தார்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைத் பதிவு செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார் தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் தங்களுக்கு கொடுக்காது பரவவில்லை துரோகிகள் வீழ்த்த 59 வேட்பாளர்கள் வெற்றி பெறுவோம் ,குக்கர் சின்னம் தங்களுக்கு ஒதுக்காதது பின்னடைவு இல்லை என்றும் கூறினார்
3 கோடி ரூபாய் கடன் உள்ளது என ஓ.பி.எஸ் மகன் வேட்புமனுதாக்கலில் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. தேனி மாவட்ட மக்களுக்கு தெரியும் உண்மை என்னவென்று. இவ்வாறு டிடிவி கூறியுள்ளார்.