நான் கன்னடத்துக்காரன் தான்! மீண்டும் பிரகாஷ்ராஜ் மொழி வெறிப் பேச்சு!

பிரதமர் மோடிக்கு எதிராக போர்க்குரல் கொடுத்துவரும் நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி கடுமையாக பிரசாரம் செய்தார். அங்கு தேர்தல் முடிந்துவிட்ட நிலையில்,இப்போது டெல்லிக்குப் போயிருக்கிறார்.


டெல்லியில் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு முழு ஆதரவு கொடுத்திருக்கும் பிரகாஷ் ராஜ், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், டெல்லியிலுள்ள பெரும்பாலான கல்வி நிலையங்களில் தமிழர்கள் அதிக அளவில் படித்துவருகிறார்கள், தமிழ் மாணவர்களால் டெல்லி மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அதை அப்படியே பிரகாஷ் ராஜும் எடுத்துக் கூறினார்

அப்போது செய்தியாளர்கள், நீங்கள் தமிழ் மூலமாகத்தான் பிரபலம் ஆனீர்கள், இப்படி கூறலாமா என்று கேட்க, அந்தக் கேள்விக்கு நேரடியாக எந்தப் பதிலும் அளிக்காமல், ‘நான் கன்னடத்துக்காரன்’ என்று மட்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜின் திமிர் பேச்சு தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழ் மாணவர்களால் டெல்லி மாணவர்கள் வாய்ப்பு பறிபோகிறதா என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பதில் சொல்லும் சூழல் உருவானது. தமிழர்கள் திறமையில் அடிப்படையில்தான் சீட் பிடிக்கிறார்கள், குறுக்குவழியில் அல்ல என்று முதல்வர் பதில் சொல்லியிருக்கிறார்.

இப்போது இந்த விவகாரத்தில் பல்டி அடித்துள்ள பிரகாஷ்ராஜ், நான் தமிழ் மாணவர்கள் குறித்து எதுவுமே கூறவில்லை என்று கூறியிருக்கிறார். திரையில்தான் நல்லா நடிப்பார் என்று பார்த்தால், நிஜத்திலும் சூப்பரா நடிக்கிறாரே..