இதை மட்டும் ஸ்டாலின் செஞ்சா நான் அரசியல விட்டே போய்டுறேன்! அன்புமணி அதிரடி சவால்!

தயாநிதிமாறன் எனும் பணமுதலையிடம் பணம் மட்டுமே உள்ளது , ஆனால் நம் வேட்பாளரிடம் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற மனம் மட்டுமே உள்ளது பத்து ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தபோது தொகுதி பக்கமே வராதவர் தயாநிதிமாறன்.கடந்த காலம் முழுவதும் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோது தொகுதிக்கு என்ன செய்தார்கள் ?


அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறப்போகிறது என தெரிந்ததால் விரக்தியின் உச்சியில் இருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு திட்டமட்டுமே தெரியும் ஆனால் எங்களுக்கு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்க தெரியும் மத்திய அரசின் கோதாவரி திட்டத்தின் கீழ் ஆண்டுமுழுவதும் நமக்கு தண்ணீர் கிடைக்கும்.

அடுத்த திமுக தலைவர் உதயநிதிஸ்டாலின் தான். அதுதான் அங்கு நடைமுறை.தருமபுரியில் அன்புமணியை தவிர வேறு பாமகவினர் இல்லையா என உதயநிதிஸ்டாலின் கேட்கிறார் , நான் கேட்கிறேன் உங்களது குடும்பத்தினரை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா ? கோடீஸ்வரராக இருந்தால் மட்டுமே திமுகவில் சீட்டு வாங்க முடியும்.

வன்னிய சொத்துக்களை எங்கள் குடும்பத்தினர் பெயரில் இருப்பதாக ஸ்டாலின் நிருபித்தால் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க நான் தயார். நிரூபிக்காவிட்டால் திமுக தலைவர் பொறுப்பில் இருந்து விலக தயாரா ? அதை தான் திமுகவினரும் எதிர்பார்க்கின்றனர். அண்ணா துவங்கி , கலைஞர் நடத்திய திமுக தற்போது ஸ்டாலினிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஸ்டாலினை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கிறது , ஒரு மாதிரி ஆகிவிட்டார் அவர்.

நாங்கள் திமுக கூட்டணிக்கு செல்லாததால் தான் அதிமுகவை கூட விட்டுவிட்டு பாமகவை பற்றியே திட்டிதீர்க்கிறார். இதுவே நாங்கள் திமுக கூட்டணிக்கு சென்றிருந்தால் சமூகநீதி காவலர்கள் என புகழ்நதிருப்பார். ஸ்டாலினுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை விவாதம். நான்கு வருடங்களாக நானும் விவாதத்திற்கு அழைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் அவர் வரமாட்டார்