100 அடி உயர பாலம்! குதிக்க முயன்ற இளைஞர்! 2 பேர் சேர்ந்து செய்த தரமான சம்பவம்! வைரல் வீடியோ!

மேம்பாலத்தில் இருந்து குதிக்கக் காத்திருந்த இளைஞர்; சாதுர்யமாக மீட்ட இருவர் விடியோ காட்சிகள்


ஹைதராபாத்தில் உயரமான மேம்பாலம் ஒன்றில் இருந்து குதிக்கத் தயாராக இருந்த இளைஞரை இருவர் காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.  ஐதராபாத் விமான நிலையத்துக்குச் செல்லும் பி.வி.என்.ஆர். விரைவுச் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கைப்பிடி விளிம்பில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் எந்த நேரத்திலும் குதித்துவிடத் தயாராக இருந்தார். 

இதனை அந்த வழியாக எதிர்மார்க்கத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற இருவர் கவனித்து விட்டனர். வாழ்க்கையில் விரக்திக்கான ஏதேனும் காரணமாக இருக்கக் கூடும் எனக் கருதிய அவர்கள் அந்த இளைஞரை எவ்வாறேனும் காப்பாற்ற திட்டமிட்டனர்.

இதையடுத்து வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த நபரின் பின்பக்கமாக விரைந்து நெருங்கிய அவர்கள் அவர் கீழே குதிக்கப் போகும் கடைசி வினாடிகளில் அவரை கெட்டியாகப் பிடித்து அவரை பாலத்தின் உட்புறமாக இழுத்துக்காப்பாற்றி தங்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று காப்பாற்றினர்.

இது தொடர்பான காவல்துறை விசாரணையில் பாலத்தில் இருந்து குதித்தால் பிரதமர் மோடி கார் பரிசு அறிவித்திருப்பதாக செய்தியில் படித்ததாக அந்த நபர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதுபொன்ற செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் அந்த நபர்  மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.