அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கழுத்தை நெறித்து மூச்சை நிறுத்தி சடலத்துடன் உல்லாசம்..! அமெரிக்காவில் இந்திய இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பயங்கரம்!
தெலுங்கானா மாநிலம் ஐதாபாத்தை சேர்ந்த தம்பதி பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறினர். இவர்களின் 19 வயது மகள் ருத் ஜார்ஜ், இலினாய்ஸ் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் பல்கலைக் கழகம் அருகே நடந்து சென்ற ருத் ஜார்ஜை பின்தொடர்ந்து சென்ற டொனால்டு துர்மன் என்பவன் ஆள்அரவமற்ற இடத்தில் அவரை தூக்கி அங்கே கார் நிறுத்துமிடத்தல் இருந்த மற்றொருவரின் காரில் போட்டுள்ளான். பின்னர் அந்த மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் மாணவியை விடுவித்தால் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்து அவரை கொலை செய்து காரிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளான்.
மாணவி காணாமல் போய்விட்டதாக பெற்றோர் தந்த புகாரில் அவரை தேடிவந்த நிலையில் ரூத் ஜார்ஜ், பல்கலைக்கழகத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஒரு காரில் சடலமாக இருந்ததை பார்த்தனர். அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியை தேடிவந்த போலீசார் சிகாகோ 'மெட்ரோ' ரயில் நிலையத்தில் ருத் ஜார்ஜை கொலை செய்த டொனால்டு துர்மன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மாணவர் இல்லை என்பதால் பல்கலைக்கழகத்திற்குள் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.