ஓடும் ரயில்! அவசரத்தில் பயணி! நொடியில் நிகழ்ந்த விபரீதம்! கடவுள் போல் வந்த போலீஸ்காரர்! வைரல் வீடியோ!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரயில் நிற்பதற்கு அவசர அவசரமாக இறங்க முயற்சித்த பயணி ரயிலுக்கும் நடைமேடைக்கும் சிக்கிக் கொண்டார். அவரை ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர் காப்பாற்றிய சி.சி.டிவி. காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது


சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது சுமார் காலை 8.20 மணியளவில் ஐதராபாத் அருகே உள்ள நம்பள்ளி என்ற ரயில் நிலையத்தின் 5வது பிளாட்பாரத்தில் நிற்பதற்காக சார்மினார் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் ரயில் நிற்க வேண்டிய சூழலில் சுமார் 45 வயது மிக்க பயணி ஒருவர் அவசரமாக இறங்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால்தடுக்கி விழுந்ததில் பிளாட்பாரம் மற்றம் ரயிலுக்கு இடையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அவர் உயிருக்கு போராடிக்குகொண்டு இழுத்த செல்லப்படுவதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் விகுல் குமார் என்பவர் உடனடியாக ஓடிச் சென்று அவரை பத்திரமாக இழுத்து நடைமேடையில் படுக்க வைத்தார். இடைவெளியில் சிக்கிய பயணிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. 

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ரயிலில் இருந்து அவசரமாக இறங்க முயற்சித்த பயணி பெயர் வெங்கட் ரெட்டி என்பதும் செகந்திராபாத்தை சேர்ந்த அவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது. வெங்கட் ரெட்டியை காப்பாற்றி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை கீவல் விகுல் குமாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து ஐதரபாத் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் ஜனார்தனன் பேட்டியளித்த போது ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த தொழிலதிபர் வெங்கட் ரெட்டி திடீரெ சறுக்கி விழுந்ததால் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைவெளியில் சிக்கிக் கொண்டதாகவும் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் ஆர். பி. எப். காவலர் விகுல் குமார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த சில வினாடிகள் ரயில் நிற்கும் என்ற சூழ்நிலையில் பயணிகள் இதுபோன்று ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும் எல்லா சமயங்களிலும் காவலர்களால் கண்காணித்து காப்பற்ற இயலாது எனவும் கூறினார். பொதுவாகவே தொழிலதிபர்கள் ஓடி ஓடி சம்பாதிப்பதற்காக சரியான உணவு, உறக்கம் இல்லாமல் அவசர அவசரமாக செல்வது வாடிக்கையாகி போனது. அதனாலேயே பெரும்பாலான தொழிலதிபர்கள் வாகன விபத்துகளிலும் சிக்கி உயிரிழக்கின்றனர்.

குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதிக்கும் பணம் கவனக் குறைவால் விபத்து ஏற்படும்போது கடன் வாங்கி குடும்பம் நடத்தும் நிலைக்கு சென்ற குடும்பங்கள் ஏராளம்.