அவனுங்கள எங்ககிட்ட விடுங்க! பிரியங்கா கொலையாளிகளை அடித்து தூக்க திரண்ட மக்கள்! பரபர வீடியோ உள்ளே!

நாட்டையே உலுக்கி எடுத்த தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் சம்மந்தபட்ட குற்றவாளிகள் 4 பேர்.


 போலீசார் , டோல்கேட் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்து, விசாரணையை அடுத்து நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தபட்டனர். இதற்கிடையில் , பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமையால் கொந்தளித்த மக்கள், குற்றவாளிகளை சஞ்சல் குடா சிறைக்கு கொண்டு செல்லும் முன்னதாக வைத்திருந்த, 

காவல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடி முற்றுகையிட்டு, குற்றவாளிகள் 4 பேரையும் , பொதுமக்கள் ஆகிய எங்களிடம் ஒப்படையுங்கள், நாங்க அவங்களுக்கு பாடம் புகட்டுறோம்னு அங்கிருந்த மக்கள் கோஷம் போட, நிலைமை கை மீறுவதை அறிந்து கொண்ட போலீசார், அங்கிருந்த மக்களை கலைந்து செல்ல வலியுறுத்தியுள்ளனர். 

எ னினும் கலைந்து செல்ல மறுத்த பொது மக்கள் செருப்பு மற்றும் கருங்கற்களுடன் காவல் நிலையத்திற்க்குள்ளாக நுழைந்ததுடன் தாக்க முற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து நிலையை கட்டுக்குள்ளாக வைக்க நினைத்த போலீசார் அங்கிருந்தவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இது வரை அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வலியுறுத்தி வந்த மக்கள், 

தற்போது கள மிறங்கி, காவல் நிளையத்தில் நுழைந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட முயன்றது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனி இது போன்ற தவறுகளில் ஈடுபடுவோர் க்கு அச்சம் உண்டாகும் .