மகள் கற்பழித்து கொலை! பிரியங்கா பெற்றோர் எடுத்த திடீர் முடிவு! வீட்டு வாசலில் எழுதி வைக்கப்பட்ட பகீர் வாசகம்! என்ன தெரியுமா?

கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பெற்றோர் புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கின்றனர்.


ஐதராபாத்தில் கடந்த வாரம் இரவு வீடு திரும்புகையில் கற்பழித்து எரித்துக் கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் இறப்பு நாட்டையே உலுக்கியது. 

இந்த கொடூரத்தை செய்த நால்வரை போலீசார் கைது செய்து உரிய முறையில் விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரியங்கா ரெட்டியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் மற்ற சில பிரபலங்களும் அவர் வீட்டிற்கு வந்து செல்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா ரெட்டியின் பெற்றோர் தனது வீட்டு சுவற்றின் முன்பாக அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் பிரபலங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என பலகை மாட்டி இருக்கின்றன.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஆனால் இதுபோன்ற சம்பவம் நடந்தால் ஆதாயம் தேடுவதற்காக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வீடு தேடி வந்து ஆறுதல் கூறுவது போல பாவனை செய்கின்றனர். பிரியங்கா ரெட்டி பெற்றோரின் இந்த முடிவு இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்கும் வண்ணம் இருக்கிறது என ஆதரவு தெரிவித்துள்ளனர்.