அசுர வேகம்! ஒரே நொடி! பற்றி எரிந்த ஆம்னி பேருந்து! 60 பேரின் கதி?

ஹைதராபாத்தில் சுமார் 60 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நடுவழியில் தீப்பிடித்து எரிந்தது.இந்நிலையில் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார்.


தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் புறநகர் பகுதியில் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில் நடுவழியில் திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக பேருந்திலிருந்து புகை வர தொடங்கியது. இதை அடுத்து அப்படியே பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பேருந்தில் இருந்து அதிகப்படியான புகை வர தொடங்கியது.

இந்நிலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் அவசர அவசரமாக பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அனைத்து பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கியவுடன் பேருந்தில் இருந்து கரும்புகை கிளம்பத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஓடும் பேருந்தில் திடீரென தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.