பெண் பார்க்க வந்ததோ அக்காவை..! ஆனால் மாப்பிள்ளை கற்பழித்ததோ தங்கையை! கல்யாண வீட்டில் அரங்கேறிய களேபரம்!

ஐதராபாத்: அக்காவை பெண் பார்க்க வந்த இளைஞர் தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் 2 பேர், நிஜாமாபாத் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியபடி, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில், மூத்தவர் ஆன்லைன் திருமண இணையதளத்தில் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதன்பேரில் விசாகப்பட்டினம், நதிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய்சந்து என்பவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.  

கடந்த 30ம் தேதி பெண் பார்க்க ஜெய்சந்து நேரில் வந்திருக்கிறார். இதையொட்டி, அந்த பெண் பியூட்டி பார்லர் சென்றுவிட்டதால், வீட்டில் தங்கை மட்டும் தனியாக இருந்திருக்கிறார். அக்காவை பெண் பார்க்க வந்த ஜெய்சந்து, தங்கையின் அழகில் மயங்கியுள்ளார். இதையடுத்து, நைசாக பேசியபடி வீட்டின் உள்ளே நுழைந்து, தங்கையை அடித்து உதைத்துள்ளார். பிறகு, அவரை பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டாராம்.  

இதற்கிடையே, பியூட்டி பார்லர் சென்றுவிட்டு வீடு திரும்பிய அக்கா, தனது தங்கையின் அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்கையை மயக்கம் தெளிய வைத்து விசயத்தை கேட்டுள்ளார். இதன்பேரில் நிஜாமாபாத் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். விரைந்து செயல்பட்ட போலீசார், கர்நாடகா மாநிலம், குல்பர்காவில் பதுங்கியிருந்த ஜெய்சந்துவை கைது செய்தனர்.