லிஃப்ட் கிரில் கேட்டில் விளையாட்டு..! தவறி விழுந்த தம்பி! காப்பாற்ற முயன்ற சகோதரி! ஆனால்? நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

ஐதராபாத்: லிஃப்ட் செல்லும் குழியில் விழுந்த 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.


ஐதராபாத், ராய்துர்கம் பகுதியில் டிவிஎஸ் லேக் வியூ அபார்ட்மென்ட்ஸ் செயல்படுகிறது. இங்கு கோயில் பூசாரி ஒருவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இதில், மகன் தனுஷ்க்கு 9 வயதாகிறது. இச்சிறுவன், தனது சகோதரியுடன் லிஃப்ட் அமைந்துள்ள இடத்தில் கிரில் கதவை திறந்து , மூடி விளையாடியுள்ளான்.

அப்போது எதிர்பாராவிதமாக, கீழே சென்ற லிஃப்ட் வேகமாக மேலே வந்துள்ளது. இதன்போது, கிரில் கதவை விளையாட்டாக சிறுவன் தனுஷ் திறக்க, அவனது சகோதரி கீழே தள்ளியிருக்கிறார். இதில், தனுஷ் லிஃப்ட் மேல்புறம் வேகமாக மோதி உயிரிழந்தான். சத்தம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஓடிவந்து சிறுவனை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனாலும், வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.