பப்புக்கு ஹிஜாப்புடன் சரக்கடிக்க வந்த முஸ்லீம் பெண்! அங்கு பவுன்சர்களால் அவருக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

ஐதராபாத்: பப்புக்குச் சென்ற முஸ்லீம் பெண்ணின் பர்தாவை ஊழியர்கள் கழட்டச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ஐதராபாத்தில் ஏர் லைவ் என்ற பப் உள்ளது. இங்கு, நள்ளிரவு பார்ட்டிகள் நடப்பது வழக்கம். இந்நிலையில், மிரியம் என்ற முஸ்லீம் பெண், பர்தா அணிந்தபடி அங்கு வந்துள்ளார். தனது நண்பர்களுடன் உள்ளே செல்ல முயன்ற மிரியத்தை, பர்தாவை கழட்டும்படி பப் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் மறுக்கவே, உடனே அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு, மிரியம் மற்றும் அவரது நண்பர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி மிரியம் கூறுகையில், ''குறிப்பிட்ட பப்புக்கு பல முறை நான் எனது குடும்பத்தினருடன் சென்றுள்ளேன். ஆனால், ஒருபோதும் இல்லாமல் தற்போது பர்தாவை கழட்டும்படி அவர்கள் சொன்னது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

பொது இடத்தில் மதச்சாயம் பூசுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்,'' என்றார்.  அதேசமயம், இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.