கற்பழித்த பிறகு பெண் டாக்டர் சடலத்துடன் புறப்பட்ட லாரி..! வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி!

ஐதராபாத்: பரபரப்பை ஏற்படுத்திய கால்நடை மருத்துவர் கொலை வழக்கில், புதிய சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திஷா (பிரியங்கா ரெட்டி) எனும் கால்நடை மருத்துவரை,  லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கடத்திச் சென்று, பலாத்காரம் செய்து, பிறகு பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை விசாரித்து வந்த நிலையில், திடீரென குற்றவாளிகள் போலீசாரை தாக்கிவிட்டு, தப்ப முயன்றதால், அவர்களை போலீசார் என்கவுன்டர் முறையில் சுட்டுக் கொன்றனர். இதையொட்டி, போலீசாருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  

இந்நிலையில், கடந்த நவம்பர் 27ம் தேதி, திஷாவை லாரியில் கடத்திச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஷாம்சாபாத் பகுதியில் உள்ள தோண்டுபள்ளி சுங்கச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில், திஷாவின் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 27ம் தேதி இரவு திஷாவை மிரட்டி, மது அருந்த வைத்து, பிறகு, அவரை லாரியில் கடத்திச் சென்ற குற்றவாளிகள், ஒதுக்குப்புறமான இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு, திஷாவை கடுமையாக தாக்கியதோடு, 4 பேரும் வரிசைகட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போதே அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் விடாமல்பலாத்காரம் செய்து, பின்னர் சடலத்தை அடுத்த நாள் காலை வேறு ஒரு இடத்திற்குக் கொண்டு சென்று, சாலையோரம் சடலத்தை வீசி, பெட்ரோல் ஊற்றி எரித்தது குறிப்பிடத்தக்கது.