ஓடும் ரயிலில் செல்போன் பேசிக் கொண்டே பயணித்த போது அது கீழே விடவே அதை பிடிக்க முயன்ற இளம்பெண் 2 துண்டான பரிதாபம் ஐதராபாத்தில் நடந்துள்ளது.
ஓடும் ரயிலில் மெய் மறந்து செல்போன் பேச்சு! ஒரு நொடியில் இரண்டு துண்டான இளம் பெண் உடல்! அதிர வைக்கும் சம்பவம்!
தெலுங்கானா மாநிலம் சித்தப்பல்மண்டி என்ற பகுதியை சேர்ந்த அஸ்வினி என்ற இளம்பெண் புதன்கிழமை அன்று ரயிலில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். பெகும் பேட் ரயில் நிலையத்தை நெருங்கியபோது அடுத்த நிலையத்தில் இறங்குவதற்காக அந்தப் பெண் தயாரானார். கதவுக்கு அருகே அந்த இளம்பெண் அஸ்வினி வந்தபோது அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது.
அதை எடுப்பதற்காக அவர் கீழே குனிந்தார். அப்போது சிறிய வளைவில் ரயிலானது வேகமாக சென்றது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த அஸ்வினி ரயிலிலிருந்து தவறிக் கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி கொண்டார். அப்போது அவரது உடல் சக்கரத்தில் சிக்கி இரண்டு துண்டானது. அஸ்வினி ரயிலிலிருந்து தவறி விழுவதை ரயில் ஓட்டுநரும் கவனிக்கவில்லை.
ரயிலை அடுத்த நிலையத்தில் நிறுத்திய போது தான் விபத்து நடந்தது தெரியவந்தது. அஸ்வினி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது செல்போனில் இருந்த அழைப்பு விவரங்களின் அடிப்படையில் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.